Advertisements
School Rain Holidays: மழை நேரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதில் பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது என்றும், விடுமுறை குறித்த முடிவைப் பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.