
இந்தியா,நியூசிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணித் தொடரை கைப்ற்றியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 271 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேர்த்தது.
இதில்,இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 103 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சு தரப்பில் நியூசிலாந்து அணியின் டஃபி, ஜேமிசன், பெர்குசன் ஆகியோர் தலா ஓரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பிறகு 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 புள்ளி நான்கு ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும் அக்சர் படேல் 3 விக்கெட்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதில், ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும் தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கும் வழங்கப்பட்டது.




