Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Advertisements

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரேஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

டெல்லி மாநில முதல்வராகக் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரனை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது சட்ட விரோதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து நேரில் ஆஜராவதை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். 7-வது மற்றும் 8-வது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய பிறகு, நீதிமன்றத்தை நாடியது. அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரேஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்ததற்காகக் கைது செய்யப்படுவதை தவிர்க்க ஜாமின் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கியது. ரூ.15,000 பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மணிஷ் சிசோடியா (துணைமுதல்வர்), மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையைில் கெஜ்ரிவால் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *