
இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தின், ஹாமில்டனின் நகரில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய டாஸ்மின் பிரிட்ஸ் 53 எடுத்தார்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்அவுட்டானது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



