China : இந்தியாவின் சாத்வித் , சிராக் ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்.!

Advertisements

சீனாவில் நடைபெற்ற பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் சாத்வித்,சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சோ இக் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ இக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 17-21 என இழந்த நிலையில் அடுத்த இரு செட்களை சிறப்பாக விளையாடி 21-18, 21-15 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *