Rahulgandhi : ராகுல்காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன்!

Advertisements

வீர சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மே ஒன்பதாம் நாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறிப் புனே நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், இதற்காக அவர்களிடம் இருந்து ஊதியம் பெற்றதாகவும் ராகுல்காந்தி லண்டன் சென்றபோது பேசியிருந்தார்.
இதையடுத்து சாவர்க்கரின் உறவினர் புனே நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மே 9ஆம் நாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ராகுல்காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்தி எதிர்காலத்தில் இப்படிப் பேசக்கூடாது என்றும், மீறினால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *