விழுப்புரத்தில் பறந்தது சசிகலாவின் புதிய கட்சிக் கொடி..!

விழுப்புரம் அருகேயுள்ள அரசூரில் சசிகலாவின் ஆதரவாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அரசியல் கட்சிக்கொடியைக் கம்பத்தில் ஏற்றிவைத்துப் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அ.தி.மு.கவில் மீண்டும் இணைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தன் ஆதரவாளர்களைத் திரட்டி மாநாடு நடத்தினார்.

அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்ற புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலா கட்சிக் கொடியை ஏற்ற நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள அரசூரில் சசிகலாவின் ஆதரவாளர்கள் புதிய கம்பத்தை நிறுவிக் கொடியை ஏற்றி வைத்துப் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *