Advertisements

கோயம்பேட்டில் உள்ள கூவாரில் நடைபெற்ற தூர்வாரும் பணியை நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரிக்கும் பணியை, நீர்வளத்துறையும் ‘எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’ தொண்டு நிறுவனமும் இணைந்து மேற்கொள்கிறது.
இதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கூவாரில் நடைபெற்ற தூர்வாரும் பணியை நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், சட்டமன்ற அரசு கொறடா சபரிநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட துறைச் சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisements


