மகளிர் விளையாட்டுகளில் பங்கேற்க திருநங்கைகளுக்கு தடை – டிரம்ப்!

Advertisements

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு உத்தரவுகளைத் தொடர்ச்சியாகப் பிறப்பித்து வருகிறார்.

மேலும், இவரது பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவுகள் உலக அளவில் அதிர்வலைகளையும், கடும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன.

இந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திருநங்கைகளுக்கு எதிரான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் திருநங்கைகள் பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

“பெண்களுக்கான விளையாட்டுகளிலிருந்து ஆண்களை விலக்கி வைப்பது” உத்தரவு ஒருவர் பிறக்கும்போது ஒதுக்கப்படும் “பாலினம்” என்பதை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க கூட்டாட்சி நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

இது தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டிரம்ப், “இந்த நிர்வாக உத்தரவின் மூலம், பெண்கள் விளையாட்டுமீதான போர் முடிந்துவிட்டது” என்று கூறினார்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்து இருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *