லெபனான் தாக்குதல் நின்றால் போர் முடிவுக்கு வரும் – ஈரான் உச்ச தலைவர் !!

லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தினால், போர் முடிவுக்கு வரும் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தனது எக்ஸ் வலைத்தளத்தில்  பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில், ஹிஸ்புல்லாவின் “பொறுமை, உன்னதம் மற்றும் தியாகத்தைப்” பாராட்டி, அவ்வமைப்பை “அசையாத பாறை” என்று வர்ணித்துள்ளார். மேலும் அமெரிக்காவுடன் போரை முடிவுக் கொண்டுவர, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படுவது கட்டாயம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தெற்கு லெபனான் மக்களின் பொறுமையையும் ஆதரவையும் பாராட்டி, கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பிற தளபதிகளுக்கு அஞ்சலி செலுத்திதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *