Rotterdam Film Festival: படக்குழுவினருடன் கவர்ச்சி உடையில் அஞ்சலி அசத்தல்!

Advertisements

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டேம் பட விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை ஏழு கடல் ஏழு மலை படத்தின் நாயகி அஞ்சலி பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலி, கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்ததால் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் அஞ்சலி.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அஞ்சலி. இப்படத்தில் நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் புகழ்பெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதற்காக அப்படக்குழுவினர் நெதர்லாந்து சென்றுள்ளனர். அங்கு ஏழு கடல் ஏழு மலை படத்தின் திரையிடலின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார்.

ரோட்டர்டேம் பட விழாவில் கொசுவலை போன்ற வெள்ளை நிற சேலையில் வந்து கலந்துகொண்ட அஞ்சலி, இயக்குனர் ராம், நடிகர் நிவின் பாலி, மற்றும் நடிகர் சூரி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த ரோட்டர்டேம் பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிட தேர்வாகி உள்ளது. இதற்காக வெற்றிமாறன் நெதர்லாந்து சென்றுள்ளார். அவர் ஏழு மலை ஏழு கடல் பட திரையிடலிலும் பங்கேற்றார். அப்போது அப்படக்குழுவினருடன் வெற்றிமாறன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதில் மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்த ரோட்டர்டேம் பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை ஆகிய இரண்டு படங்களிலுமே சூரி நடித்திருக்கிறார். இதனால் அவர் டபுள் சந்தோஷத்தில் உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *