சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
குப்பனூர் பைபாஸ் சாலை மற்றும் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் நிலக்கடலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சடைந்துள்ளனர்.
