Salem Black Flag Protest: கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!

Advertisements

கவர்னர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும்அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் பல்கலைக்கழகம் முன்பு சேலம் மாநகர காவல்துறை சார்பில் 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக கவர்னர் ஆ.என்.ரவி வந்தார். அவரைத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடவுள்ளார்.

இதனிடையே, கவர்னர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மற்றும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும்அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். மேலும் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு சேலம் மாநகர காவல்துறை சார்பில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *