Gingee Masthan: ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேர் இரண்டு ஆண்டுப் பணி ஒப்பந்த அடிப்படையில் குவைத்திற்கு பணிபுரியச் சென்றுள்ளனர். ஓராண்டு பணியாற்றிய நிலையில், முறையாகச் சம்பளம் வழங்காததால் நாடு திரும்ப முடியாமல் தவித்த 19 பேரும், மத்திய அரசின் உதவியுடன் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியில் மீட்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் வந்த அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடும் ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குவைத்திலிருந்து மீட்கப்பட்ட கண்ணன், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மட்டும் 10 பேர் வேலைக்குச் சென்றதாகக் கூறினார்.

மேலும், குவைத்திலிருந்து தங்களை மீட்டு வந்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *