
பண்ருட்டி அருகே முந்திரி காட்டில் உள்ள குடோனில் 8 டன் அரிசி பதுக்கல் … உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் 3 பேருக்கு வலை வீச்சு…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் முந்தரிக்காட்டு பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக
திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஜெரால்டு உதவி ஆய்வாளர் சிவானந்தம் இவர்களுக்குக் கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் காவலர் பாண்டியன் குணசீலன் விஜய் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பதை உறுதிப்படுத்தினர்.

அதனை அடுத்துஉணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர் அதில் சுமார் 8 டன் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் குடோனில் உள்ள முட்டை மூட்டையான அரிசிகளை பறிமுதல் செய்தனர் விசாரணையில் இடத்தின் உரிமையாளர் மருங்கூரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி.வீரமணி ஆகியோர் இந்தக் குடோனை பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர் அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 டன் ரேஷன் அரிசியை பண்ருட்டியில் உள்ள தமிழ்நாடு உணவு குடிமை பொருள் உணவு பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

