“நல்லா இல்லை!” – முதல்வர் விஜயை விமர்சித்த சாலமன் பாப்பையா.!

Advertisements

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; என்றும், காலம் போகட்டும் பார்ப்போம் என்றும் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டிமன்ற நடுவர் சாலமன்-பாப்பையா தெரிவித்துள்ளார்.

மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவரது இடத்தில் அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன்-பாப்பையா, நூலகத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை- எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தாடைகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து, பட்டிமன்ற நடுவர் சாலமன்-பாப்பையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன என்றும், தங்களுக்கு விருப்பமான துறையில் மாணவர்கள் புத்தகங்களைப் படித்து முன்னேறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மும்மொழிக் கொள்கையை நான் ஏற்க மாட்டேன் எனவும், எதிர்காலத்தில் வேறு ஒரு மொழியை திணிப்பதற்கான வழியாக அமையக்கூடும் என்றும், தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜயின் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை என்றும், காலம் போகட்டும் பார்ப்போம் என்றும் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *