“ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை”: சென்னை வந்த எ.வ.வேலு பதிலடி.!

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை என்றும், சிங்கப்பூரில் மருத்துவ சிக்சை முடிந்து சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

சென்னை, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த மூன்றாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக, சிங்கப்பூரில் இருதய சிகிச்சை பெற்று வந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராக முடியவில்லை.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவின் மருத்துவ சான்றிதழுடன், கால அவகாசம் கோரிய கடிதத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில், அவரது வழக்கறிஞர்கள் ஒப்படைத்தனர். இதனையடுத்து, இரண்டாவது சம்மன் அனுப்பும்போது, முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலுவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்விஜய் பேசும்போது, ஒரு அமைச்சர் ஓடி ஒளிந்து விட்டார், இன்னொரு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதியாகிவிட்டார் என விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தனது உடல்நிலை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, சிங்கப்பூரில் இருதய சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன் என்றும், நான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை என்று, முதலமைச்சர் விமர்சனத்திற்கு பதிலளித்தார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை, நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ஏ.வ.வேலு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *