
கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், நாட்டு மக்களுக்கும், கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும்னது நெஞ்சார்ந்தக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதையடுத்து, கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை. இந்தப் புனிதமானப் பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம், சேவையின் மதிப்புகளைப் பறைசாற்றி நம்மை ஊக்கப்படுத்துகிறது என்று கூறினார். தொடர்ந்து, இயேசு கிறிஸ்து நமக்குக் காட்டிய பாதையைப் பின்பற்றி அன்பு நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்தார்.

