சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்!

Advertisements

சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி, தனது 79-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் சென்னையில் காலமானார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த இவரது இயற்பெயர் பூலித்துரை மாணிக்கவாசகம். தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படும் பூமணி, தனது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றவர்.

மேலும், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான புகழ்பெற்ற ‘அசுரன்’ திரைப்படம், பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவையொட்டி, இன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *