8 வயது குழந்தைகளுக்கா இந்த நிலை?

கஞ்சா போதையில் 8 வயதுக் குழந்தைகளைக் கூடப் பாலியல் முறையில் துன்புறுத்தும் அவல நிலை திமுக ஆட்சியில் அரங்கேறி வருவதாகப் பாஜகவின் வேலூர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் அவர், திமுக ஆட்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துக் கஞ்சா போதையால் 8 வயதுச் சிறுமிகளைக் கூடப் பாலியல் முறையில் துன்புறுத்தும் அவல நிலை உள்ளதாகத் தெரிவித்தார். பெண் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கும், விளையாடுவதற்கும் வெளியில் அனுப்பப் பெற்றோர் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *