
திமுக அரசின் துரித நூதன ஊழல் பற்றி பாஜக தமிழ் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தங்களது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாத புதுப்புது திட்டங்களை அறிவித்து அதற்கு பெருந்தொகையினை நிதியாக ஒதுக்குவது முறைகேடான செயல் என அவர் தனது பதிவில் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் ஒரு செய்தி தொகுப்பினை நாம் இப்போது பார்க்கலாம்.
2026 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேலையில், நடந்து கொண்டிருக்கும் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி நடைமுறைக்கு சாத்தியமாகியது. தேர்தலுக்கு முன் கமிஷன் மூலம் கல்லா கட்ட திமுக அரசின் ராஜ தந்திரச் செயலா இது என்பதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வரும் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது தனக்கும் எதிர்க்கட்சியினருக்கும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது ஒருபுறமிருக்க, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.இந்த பணிகள் சிறப்பாக நடைபெறுமா என்பதும் சந்தேகமே
நடைமுறை வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், இதுவரை இல்லாத அளவில் நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சிக்கு 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி நடைமுறை சாத்தியமாகியது. இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசின் ராஜ தந்திரமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்!
ஒருவேளை வருகின்ற 2026சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசு தோற்று விட்டால் என்ன செய்வது. எனவே இருக்கும் போதே கிடைப்பதை சுருட்டிக் கொள்வோம் என்கிற அடிப்படையில் நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொழுத்தது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் மொத்தமாக கமிஷன் அடித்து, வாரி சுருட்டிக்கொள்ள தி.மு.க. அரசு திட்டமிடுவது தெள்ளத்தெளிவாகிறது
அவ்வாறு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் போடும் திட்டங்கள் என்றும் நிறைவேறாது! அவர்களின் உண்மை முகங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, அவர்களின் கமிஷன் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி, விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பூட்டு போடுவர்கல் என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்.
பாஜகவின் மாநிலத்தலைவிரின் இந்த பதிவு அரசியல் வாட்டாரத்தினிடையே பெரும் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.


