அனல் மின் நிலையம் எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்கம்பத்தில் ஏறி போராட்டம்!

மேட்டூர்:

மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் திறனுடைய 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தினசரி 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்கின்றன. இரண்டு அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் சாம்பல் போன்ற பல்வேறு பிரிவுகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தம் செய்து, பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தை நிறுத்துமாறு தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனல் மின் நிலையத்திற்கு எதிரில் உள்ள மின் கம்பத்தில் 5 தொழிலாளர்கள் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *