பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம்..!

Advertisements

தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தால்  கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்துத் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட இளைஞர் அணித் தலைவர் விவேக்குமார், மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, துணைத் தலைவர் முத்துக்குமார், அதிமுக துணைச் செயலாளர் சண்முகையா, பாமக செயலாளர் சீதாராமன், பாஜக இளைஞர் அணி விக்னேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, பாமக, அதிமுக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தமிழ்நாட்டில் காவல் துறையில் 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *