முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

சைதாப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக  திரைப்பட நடிகர்கள் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று கபடி போட்டியை கண்டு ரசித்தனர். இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சுப்பரமணியன் பரிசுகளை வழங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *