Gutka Smuggling: 48 பேர் கைது!

Advertisements

போதைப்பொருள் விற்ற  48 பேர் கைது!

சென்னை: மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சென்னையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த 48 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 456 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ன்னை மாநகர காவல் எல்லையில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தமிழ்நாடு அரசு தடை செய்துள்ள குட்கா பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை முழுவதும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ப்போது வட மாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலம் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்ததாக தனித்தனியாக 35 வழக்குகள் போலீசார் பதிவு செய்து, வியாபாரிகள் உட்பட 48 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 456 கிலோ குட்கா புகையிலை , 743 கிலோ மாவா, ரூ.28,720 ரொக்க பணம், ஒரு செல்போன், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *