
விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடத்தை தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து கோடியே நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பொது மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்தது. இதனை, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தார்.
இதன் பின்னர், கூடுதல் கட்டிடத்தை தமிழக தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து, மருத்துவ வளாகத்தை ஆய்வு செய்ததோடு அதன் தரத்தைப் பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.
இவ்விழாவில், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி, மருத்துவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


