
மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ரூ.262 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் காலாண்டு வருவாயில் லாபம் ஈட்டியதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “2007 ஆம் ஆண்டில் BSNL கடைசி முறையாக காலாண்டு லாபம் பெற்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்த சந்தாதாரர் எண்ணிக்கை, டிசம்பர் மாதத்தில் சுமார் 9 கோடியாக உயர்ந்துள்ளது” என்றார்.
கடந்த நிதியாண்டின் 3ம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, BSNL செல்போன் சேவையின் வருவாய் 15%, பைபர் இணைய சேவையின் வருவாய் 18%, தொலைத்தொடர்பு கம்பி வழித்தட குத்தகை வருவாய் 14% அதிகரித்துள்ளது.
மேலும், BSNL தனது நிதிச் செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த செலவுகளை குறைத்துள்ளது.
