சபரிமலை தங்கம் திருட்டில் சிக்கிய நடிகர் ஜெயராம்: பரபரப்பு பின்னணி.!

Advertisements

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருடிய வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் சிக்கி இருக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையில் உள்ள தங்கத்தை தனது வீட்டில் வைத்து பூஜை செய்த விவகாரத்தில் நடிகர் ஜெயராம் சிக்கிய விவகாரம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராம் சிக்கியது எப்படி என்ற பின்னணி தகவல்கள் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து சுமார் 10,000 கோடி ரூபாய் கடனுடன் தப்பி ஓடியவர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் 1998 மற்றும் 99 காலகட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை தானமாக வழங்கினார் அந்த தங்கத்தை பயன்படுத்தி சபரிமலை ஐயப்பன் கோவிலின் கருவறை கதவுகள் மற்றும் அங்குள்ள துவார பாலகர் சிலைகளுக்கு தங்கு தகடுகள் பொருத்தப்பட்டன

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவிலில் இந்த தங்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது தங்கத்துக்கு பதிலாக செப்பு தகடுகள் வைத்து மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது முன்னதாக 42.9 கிலோ தங்கம் இருந்த நிலையில் தற்போது 38 கிலோவாக குறைந்து இருந்தது. மொத்தம் நான்கரை கிலோ தங்கம் காணாமல் போயிருந்தது.

ஒட்டு மொத்த கேரள மாநிலத்தையே இந்த சம்பவம் அதிர வைத்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.கேரள மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போது தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் கைது செய்யப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ள தங்க கலசங்கள் மற்றும் தங்க தகடுகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி உன்னி கிருஷ்ணன் போத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது . அவர் அந்த தங்க பொருட்களை சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருந்து எடுத்து வந்து சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சீரமைக்கும் பணிகளை கொடுத்து இருந்தார்.

இதன் பின்னர் , அந்த தங்கப் பொருட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு திரும்ப சாத்தப்பட்டது இந்த நிலையில் தான் தற்பொழுது நான்கரை கிலோ தங்கத்துக்கு பதிலாக செப்பு தகடுகள் வைத்த அதிர்ச்சி தகவல் வெளியே தெரிந்திருக்கிறது. இது தொடர்பாக,  உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் முன்னாள் தலைமை அதிகாரி முராரி பாபு மற்றும் முன்னாள் தலைவர் ஏ பத்மகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் சபரிமலை கோவிலில் முன்னாள் அர்ச்சகர் ஆக வேலை பார்த்தவர். எனவே அவருக்கு சபரிமலை கோவிலில் உள்ள தங்க விவகாரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியும் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில் , இது தொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் சிக்கி இருக்கிறார். தமிழ் சினிமாக்களிலும் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர் நடிகர் ஜெயராம்.

மலையாள நடிகர் ஜெயராம் திருவனந்தபுரம் தவிர சென்னையில் வளசரவாக்கத்திலும் ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். வளசரவாக்கத்தில் நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை ஐயப்பன் படத்துக்கு ஒரு பூஜை நடத்தப்பட்டது.  அந்த பூஜையின் போது தங்க கவசம் ஒன்றை வைத்து நடிகர் ஜெயராம் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தன. இந்த அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கவசம் நடிகர் ஜெயராம் வீட்டில் இருப்பதைக் கண்டு கேரள புலனாய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னைக்கு விரைந்து வந்து நடிகர் ஜெயராமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் தனது வீட்டில் சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதை ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக புலனாய்வு குழுவிடம் அவர் வாக்கு மூலமும் அளித்திருக்கிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் நான் கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறேன் .

அந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்த உன்னிகிருஷ்ணன் போத்தி ஒரு மகர பூஜை விளக்கு நிகழ்ச்சியின் போது எனக்கு நட்பு ரீதியாக பழக்கமானார். அந்த வகையில் அவர் தான் சபரிமலை கோயில் ஐயப்பன் தங்க கலசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால் உங்களுக்கு நிறைய செல்வம் சேரும் என்று கூறினார்.  இதன் பேரில் அவர்தான் எனக்கு தங்க கலசங்களை கொடுத்தார் நானும் வீட்டில் வைத்து பூஜை செய்தேன்.

ஆனால் அவர் திருட்டு நகைகளை கொண்டு வந்து என்னிடம் தந்திருப்பார் என நான் நம்பவில்லை. இது தொடர்பாக நான் அவருக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்பது உண்மை . மேலும் தங்கக் கலசங்களை சீரமைத்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. என் வீட்டில் நடந்த பூஜையை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்த பூஜைகளிலும் நான் கலந்து கொண்டேன்.

உன்னிகிருஷ்ணன் போத்தி பலமுறை சென்னையில் இருக்கும் எனது வீட்டுக்கு வந்திருக்கிறார் . எனது வீட்டில் உணவு அருந்தி இருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. அதன் பேரில் தான் சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட பூஜைக்கும் நான் சென்றேன் மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த விதமான நிதி பரிவர்த்தனையும் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே , சபரிமலை தங்க கவசம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமும் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் முன்னணி நடிகரான ஜெயராம் சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கத்திட்டு வழக்கில் சிக்கி இருக்கும் தகவல் தற்போது கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது முக்கிய செய்தியாகும்..

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *