
காமன்வெல்த் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமா காளிராம்னாவிற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமா காளிராம்னாவிற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உங்களின் இந்த சாதனை உங்களது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்குச் சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்களின் வெற்றி, இளம் பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
நீங்கள் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்து தர வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.



