Advertisements

அமெரிக்க தலையீடு இருக்கும்வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணையை அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து நிர்வகிக்கலாம் என்ற அண்டை நாடான ஓமனின் சமரச திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் முன்பு இருந்ததைப்போல, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குவதற்கு முன் இருந்ததைப் போல, அனைவருக்கும் தடையற்ற சுதந்திரமான அணுகல் நிலைக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திரும்பாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Advertisements


