Rahul Dravid: பயிற்சியாளராக இருந்தபோது மோசமான காலம் இதுதான் !

Rahul Dravid: பயிற்சியாளாராக இருந்த கால நினைவுகள்குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பகிந்துகொண்ட விசயங்களை இங்கே காணலாம்.

பயிற்சியாளராக மோசமான காலம்

ராகுல் டிராவிட் கிரிக்கெட் பயிற்சியாளராகத் தனது மோசமான காலம்குறித்து மனம் திறந்துள்ளார். 2021-2022 ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. தென்னாப்பிரிக்கா மண்ணில் வெல்வதற்கு சாத்தியம் இருந்தும் அது தவறியது. விராட் கோலிக்கு அது கேப்டனாகக் கடைசி தொடர். முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், முடிவு வேறொன்றாக இருந்தது.

ராகுல் டிராவிட் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய தொடர் காலம் எனக்கு மிகவும் மோசமான ஒன்று. டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை வென்றுவிட்டோம். அப்போது, தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்தத் தொடரில் வென்றால் அது வரலாற்று நிகழ்வு. பெரிய வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அப்போது இடம்பெறவில்லை. ரோஹித் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாமல்போனது. தென்னாப்பிரிக்க அணி நன்றாக விளையாடினர். நாங்களும் நல்ல ஸ்கோர் எடுக்க முயன்றோம். ஆனால், தொடரில் வென்றி பெறவில்லை. அதுவே என் பயிற்சிகாலத்தில் மோசமாகக் காலம்.” என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *