Advertisements

வினாத்தாள் கசிவு மாபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பல தசாப்தங்களாக மத்திய, மாநில அரசுகள் வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இச்சூழலை மாற்றவே நமது அரசு தேர்வு முறையில் அதிவேக நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் மாநிலங்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய தொடர் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
தாங்கள் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்றிருந்தோம், நான் உங்களுக்கு வாக்குறுதியளித்தபடியே, கடந்த இரண்டு நாட்களாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அதனை விரிவாக விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார். பிறகு இரு அவை உறுப்பினர்களும் கடுமையான சட்டங்களுடன் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தற்போது, சர்வதேச தேர்வு முறையை நோக்கிய ஒரு முக்கியப் பணி நிறைவடைந்துள்ளதாக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisements



