S. Valarmathi I. A. S: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!

Advertisements

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தைப்பொங்கல் திருநாளில் முதல் நாள் வரும் போகி பண்டிகையைக் காற்றில் மாசு ஏற்படுத்தாமல் மாசற்ற பொங்கலாக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

*இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்*

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் முதல் நாள் நம் போகிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்துப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் தோசை கோளாறு போன்ற நோய்களால் பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்படுகிறது.

மேலும் வாகன ஒட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப்பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்துக் காற்றின் தரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் புகையில்லா மாசற்ற போகிப்பண்டிகை மற்றும் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் சுற்றுச் சூழலைப் பேணிக்காப்போம் எனக் கூறி இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *