Fire Accident: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Advertisements

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாகத் தீயில் எரிந்து  சேதமடைந்தது.
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தடுத்த நத்தாநல்லூர் பகுதியில் டி கோட்டி ட்ரெண்ட் எனும் அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை 150 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று  மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் சென்று விட்ட நிலையில் இரவு 10 மணி அளவில் மின் கசிவு காரணமாகத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.தீ விபத்துகுறித்து பணியில் இருந்த காவலாளி தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

தீ விபத்துகுறித்த தகவலின் பெயரில் காஞ்சிபுரம் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட  பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் தொழிற்சாலைக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்குள் தொழிற்சாலை முழுவதிலும் இருந்த பொருட்கள் அனைத்தும் மள மள தீப்பற்றி எரிந்ததால் தீயை அணைக்க பல மணி நேரமாகத் தீயணைப்பு துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்து சம்பவம்குறித்து வாலாஜாபாத் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாகத் தீயில் எரிந்து  சேதமடைந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *