S. S. Sivasankar Case: அமைச்சர் சிவசங்கர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Advertisements

கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்விசாரணைக்கு ஆஜரானார்.

2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டபோது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இதுகுறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்குச் சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நேற்று திருச்சியில் நடத்த பேருந்து விபத்துகுறித்து தெரிவிக்கையில், அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது, புதியதாக 7000 பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், புதிய பேருந்துகள் வர வரப் பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும்.இந்த ஆண்டுக்குள்ளேயே 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *