சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் சோதனை – எ.வ.வேலு ஆவேசம்!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் தவெக அரசு பழிவாங்கும் ஈடுபட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகள், அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பா முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது, சட்டப்பேரவையில் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும்  சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் தற்போது இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.  சம்பந்தமே இல்லாமல் தனக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

சோதனையால்  பயந்துவிடுவோம் என தவெக அரசு நினைக்கிறது என்றும் திமுக மிசாவையே பார்த்த இயக்கம் என்று குறிப்பிட்டார். நீதிமன்றம் மூலம் தான் நிரபராதி என்பதை கட்டாயம் நிரூபிப்பேன் என்று தெரிவித்தார். 40 லட்சம் ரூபாய் கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியது வடிகட்டிய பொய் என்றும் ஒரு பைசா கூட அவர்கள் எடுத்துச்செல்லவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *