வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !

Advertisements

மான்செஸ்டரில் நடைபெற்ற மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப் பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன் படி, முதலில் விளையாடிய வங்கதேச அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் குவித்தது.

இதில், அதிகபட்சமாக ஜுவைரியா ஃபெர்டஸ் 33 ரன்களும் நிகர் சூல்தானா 32 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் ராதா யாதவ் மூன்று விக்கெட்களும் ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து அபார வெற்றிப் பெற்றது.

இதில், அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 53 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *