அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களாக எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்!

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்கு சென்றது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்.பி. வேலுமணி தலைமையில் உள்ள 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அண்மையில் எஸ்.பி. வேலுமணி அணி, எடப்பாடி அணியுடன் இணைந்தது.

இந்நிலையில், தற்போது எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்களுக்கு மீண்டும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக – எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், தலைமை நிலையச் செயலாளர் வரகூர் அருணாச்சலம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலருக்கு முக்கிய பொருப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *