
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தன் போட்டியை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை காமராஜர் சாலையில் தமிழநாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், கொடியசைத்து மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்து ஓட்டத்திலும் பங்கேற்றார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த,மரிய வில்சன், வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் விஜய் ஒடிக்கொண்டே மக்களுக்கு கைசைத்தார். போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் start run stop drug என்ற வாசகத்தை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



