வழித்தட விதிகளை மீறும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஈரான் அதிரடி!

தாங்கள் நியமிக்கப்பட்ட வழித்தடங்களுக்கு வெளியே செல்லும் போக்குவரத்திற்கு “பாதுகாப்பு வழங்கப்படாது என்று ஈரானின் பாரசீக நீரிணை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்தியக் கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் அங்கீகரித்த வழித்தடத்தை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியதால் நீரிணையை கடக்க முடியாமல் பல்வேறு கப்பல்கள் பின்வாங்கியுள்ளன.

இந்நிலையில், கப்பல்களின் பாதுகாப்பு உத்தரவாதங்களை அமைப்பு உறுதிப்படுத்தும் வரை, பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை நீரிணை வழியாக வெளியேற்றும் திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்று சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஈரானின் பாரசீக நீரிணை ஆணையம், தனது  நியமிக்கப்பட்ட வழித்தடங்களுக்கு வெளியே செல்லும் போக்குவரத்திற்கு “பாதுகாப்பான பயணத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *