Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் பிரச்சார திட்டம்!

Advertisements

சென்னை: மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, மணிலா தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 9ம் தேதி மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி வந்தடைவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் பிரச்சார திட்டம்;
* ஏப்ரல் 9: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, வேலூரில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்துப் பரப்புரை.

* ஏப்ரல் 9: தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக வாகனப் பேரணியாகச் சென்று பரப்புரை

* ஏப்ரல்10: நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்துப் பிரதமர் வாகனப் பேரணி.

* ஏப்ரல் 10: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரித்துக் கோவையில் பொதுக்கூட்டம்.

* ஏப்ரல் 13: பெரம்பலூரில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்துப் பொதுக்கூட்டம்.

* ஏப்ரல் 14: விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்துப் பொதுக்கூட்டம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *