ஜெர்மனி மாநாட்டில் முக்கிய சந்திப்பு..!

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில், உக்ரைனின் தேசப் பாதுகாப்பு குறித்தும் பொருளாதார பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்தும் உக்ரைன் அதிபருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, உக்ரைன் –  ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை ஜெனீவாவில்  வருகின்ற 17 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், உக்ரைன் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *