Advertisements

தமிழகத்தில் கஞ்சா விற்பவர்களைத் தேடி அலைய தேவையில்லை நேராக அமைச்சர்களின் புகைப்பட ஆல்பங்களை பார்த்தால் போதும் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
கோவை காந்தி பார்க்கில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணியினர் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்றார்.
தொடர்ந்து, கஞ்சா விற்பவர்களை தேடி அலைய தேவையில்லை. நேராக அமைச்சர்களின் புகைப்பட ஆல்பங்களை பார்த்தால் போதும் அதில் இருப்பவர்கள் தான் கஞ்சா விற்பவர்கள் எனக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, ஸ்டாலின் மாதிரி தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது. ஸ்டாலின் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக ஆக வேண்டும் என்பதே என் ஆசை என்றும், எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவர் நன்றாக செயல்படுகிறார் என்றும் விமர்சனத்துடன் பாராட்டினார்.
Advertisements


