
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக இஸ்ரேலுக்காகவே இந்த போரில் அமெரிக்கா ஈடுபடுவதாகச் சாடிய பெசெஷ்கியன், இதில் அமெரிக்காவுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.இது பற்றிய பிண்ணனி செய்திகளை தற்போது பார்க்கலாம்,!
கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஆரம்பித்த போர் சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த போர் ஓரிரு வாரங்களிலேயே முடிந்துவிடும் என்றே பலரும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் பாதிப்புகள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தை நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ஈரான், போர் ஆரம்பித்தது முதல் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனக் கூறி வருகிறது. இந்நிலையில் , நடுவே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தை நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ஈரான், போர் ஆரம்பித்தது முதல் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனக் கூறி வருகிறது.
சாதாரண அமெரிக்கர்கள் ஈரானின் எதிரிகள் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் மேலும், “மோதல் வேண்டுமா அல்லது நல்லுறவு வேண்டுமா என்று முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. இந்த முடிவே எதிர்காலத் தலைமுறைகளின் போக்கை வடிவமைக்கும்.. கடந்த காலங்களில் ஈரான் மீது பலரும் படையெடுத்துள்ளனர். அப்படி ஈரான் மீது படையெடுத்து வந்தவர்கள் பெயர்கள் வரலாற்றில் களங்கத்துடன் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஈரான் கண்ணியம் பெருமையுடன் இன்றும் துணிந்து நிற்கிறது” என்றார்..
மேலும் , அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவுகள், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அறிக்கைகளை வைத்துப் பார்த்தால், இந்தப் போரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ஈரான்தான் என்பதுபோல தோற்றம் இருக்காலாம். ஆனால் அதுவும் உண்மையல்ல.இந்தப் போரின் முக்கியக் காரணங்களில் ஒன்று ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது’ என்ற குற்றச்சாட்டுதான். ஆனால், அமெரிக்காவின் B-2 குண்டுகளாலும், இஸ்ரேலின் இத்தனைத் தாக்குதல்களாலும் அணு ஆயுத தளங்களை எதுவும் செய்ய முடியவில்லை எனபதுதான் நிதர்சன உண்மை.
இந்தப் போரின் பாதிப்பால் அணுசக்தி திட்ட செயல்பாடுகள் சில மாதங்கள் தள்ளிப்போயிருக்கிறது அவ்வளவுதான்” என ஒரு ரகசிய அறிக்கை கண்டறிந்துள்ளதாக CNN மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன .. இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினாலும் அதற்கு பதிலடி கொடுத்து, இஸ்ரேலுக்கு சமமான நாடு ஈரான் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது…


