COVID-19: பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ரூ 10 இலட்சம் நிதியுதவி!

Advertisements

COVID-19

புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ரூ 10 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவையில் அறிவித்தார்…

அதனடிப்படையில் கொரோனா பெருந்தொற்றினால் இறந்த கீழ்காணும் மூன்று பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் இன்று (08.09.2023) மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்கள் சட்டப்பேரவையில் உள்ள வழங்கினார். தனது அலுவலகத்தில்

1. L ரமேஷ், செய்தியாளர், மாலை தமிழகம்

2 T. வெங்கடேசன். புகைப்படக் கலைஞர், தினமலர்

3 K. தர்மராஜ் (எ) பரத், ஒளிப்பதிவாளர், பாலிமர் தொலைக்காட்சி

இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம்.R., அரசுச் செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) திரு இ வல்லவன், இ.ஆ.ப., செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் திரு ந. தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *