Puducherry:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!

Advertisements

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் கடந்த 7-ம் தேதி அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குப் பிரபல விடுதியில் தங்கியுள்ளனர்.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று விடுதியிலிருந்து வெளியேற இருந்த நிலையில் அவர்கள் 4 பேரும் அறையிலேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து பெரியகடை காவல்துறைக்கு விடுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் சடலத்தைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் பிரச்சனையா? இல்ல வேறு எது பிரச்சனையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *