அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் மழை – வானிலை மையம் தகவல்.!

Advertisements

அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 8 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் 7 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *