
ஐபிஎல் 2025 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்டியா தடை காரணமாக விளையாட முடியாது. இதனால், ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளது.
மார்ச் 23, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் ஆரம்ப போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், ஹர்திக் பாண்டியாவுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர் விளையாட முடியாது.
ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும். இந்தப் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்கொள்கிறது, மேலும் இது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். ஆனால், இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது, ஏனெனில் ஐபிஎல் நிர்வாகம் அவருக்குப் போட்டி தடை விதித்துள்ளது.
அவர் தலைமையில் ஐந்து முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. கடந்த சீசனில் ரோஹித் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கினார். இப்போது ஹர்திக்கின் இடத்தில் முதல் போட்டியில் ரோஹித் மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளது. ரோஹித் மறுத்தால், இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டனான சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் மும்பை அணியை வழிநடத்தலாம். கடந்த காலங்களில் சூர்யகுமார் சில போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாக இருந்துள்ளார். தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக வெற்றிகரமாகச் செயல்படுவதால், அவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
