யமுனை நதியின் தூய்மை பணிகளை தொடங்கியது பா.ஜ.க.!

Advertisements

புதுடெல்லி:

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் யமுனை நதியைச் சுத்தம் செய்வோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க. தற்போது டெல்லியில் ஆட்சியைப் பெற்றுள்ளது.

இதற்கான நடவடிக்கையாக, யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணிகள் டெல்லி பா.ஜ.க. அரசு தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில், டெல்லி கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

யமுனை நதியின் தூய்மைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீரில் மிதக்கும் குப்பைகள், ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த துணைநிலை கவர்னர் சக்சேனா, யமுனை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளை உடனே தொடங்க உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *