
தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்து அரசியலமைப்பு சாசனத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதில், எதிர்க்கட்சிகளின் சுயநலமிக்க அரசியலால் நாட்டில் மகளிரின் முன்னேற்றத்திற்கான போராட்டம் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மகளிரின் கனவுகள் சிதைக்கப்பட்டதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தனர் என்று கூறினார்.
மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மகளிர் இடஒதுக்கிட்டை எதிர்த்து பாவம் செய்துவிட்டனர் என்று தெரிவித்தார். எனவே, இதற்காக எதிர்க்கட்சியினர் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தோற்கடித்து அரசியலமைப்பு சாசனத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டனர் என்று குற்றம்சாட்டினார்.




